.jpeg)
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் தொடர் மழை காரணமாக நாட்டின் 09 மாவட்டங்களுக்கு உட்பட்ட பல பிரதேச செயலக பிரிவுகளுக்கு மண்சரிவு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் இன்று (13) புதன்கிழமை காலை 9:00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை, நாளை (14) வியாழக்கிழமை காலை 9:00 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணித்தியாலங்களில் பதிவான மழைவீழ்ச்சியின் அளவை அடிப்படையாகக் கொண்டு, மூன்று கட்டங்களின் கீழ் இந்த எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
எச்சரிக்கை மட்டம் 2 (தயாராக இருக்கவும்)
கடந்த 24 மணித்தியாலங்களில் மழைவீழ்ச்சி 100 மி.மீ ஐத் தாண்டியுள்ளதால், மழை தொடரும் பட்சத்தில் அவசியமேற்படின் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறத் தயாராக இருக்குமாறு பின்வரும் மாவட்டங்களின் பிரதேச செயலக பிரிவுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது:
காலி மாவட்டம் : நெலுவ
களுத்துறை மாவட்டம் : அகலவத்த, பதுரலிய, மதுகம, ஹொரண மற்றும் வலல்லாவிட்ட
கண்டி மாவட்டம் : பாஸ்பாகே கோரளை, யட்டிநுவர, உடபலாத்த, பாத ஹேவாஹெட்ட, பன்வில, கங்க இஹல கோரளை, கங்கவட்ட கோரளை மற்றும் அக்குறணை
இரத்தினபுரி மாவட்டம் : பெல்மடுள்ள மற்றும் இரத்தினபுரி
எச்சரிக்கை மட்டம் 1: (அவதானத்துடன் இருக்கவும்)
கடந்த 24 மணித்தியாலங்களில் மழைவீழ்ச்சி 75 மில்லி மீற்றரை கடந்துள்ளதால், மண்சரிவு மற்றும் சாய்வு இடிந்து விழுதல் போன்ற சாத்தியக்கூறுகள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு பின்வரும் மாவட்டங்களின் பிரதேச செயலக பிரிவுகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது:
பதுளை மாவட்டம் : பண்டாரவளை, ஹாலி எல மற்றும் பசறை
காலி மாவட்டம் : தவலம, எல்பிட்டிய மற்றும் நியாகம
களுத்துறை மாவட்டம் : இங்கிரிய மற்றும் புலத்சிங்கள
கண்டி மாவட்டம் : பூஜாபிட்டிய, தும்பனே, தெல்தொட்ட, தொழுவை, உடுநுவர, ஹதரலியத்த மற்றும் ஹரிஸ்பத்துவ
கேகாலை மாவட்டம் : புலத்கொஹுபிட்டிய, மாவனெல்லை, கேகாலை, அரநாயக்க, யட்டியாந்தோட்டை, வரக்காபொல மற்றும் ரம்புக்கனை
குருநாகல் மாவட்டம் : ரிதிகம
மாத்தளை மாவட்டம் : இரத்தோட்டை, நாவுல மற்றும் அம்பன்கங்க கோரளை
மாத்தறை மாவட்டம் : பிட்டபெத்தர
மொனராகலை மாவட்டம் : வெல்லவாய, பாதல்கும்புர மற்றும் பிபில
நுவரெலியா மாவட்டம் : நோர்வூட், அம்பகமுவ கோரளைமற்றும் கொத்மலை மேற்கு
இரத்தினபுரி மாவட்டம் : எஹெலியகொட, கலவானை, குருவிட்ட, கொடகவெல, கிரியெல்ல மற்றும் அயகம
பொதுமக்களுக்கான அவசர வழிகாட்டல்கள்
மண்சரிவு அபாயமுள்ள பகுதிகள் மற்றும் மலைப்பாங்கான இடங்களில் வாழும் மக்கள் பின்வரும் மண்சரிவு முன் அறிகுறிகள் தென்படுகிறதா என்பது குறித்து மிகுந்த விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்:
நிலத்தில் திடீரென வெடிப்புகள் உருவாவதுடன் அவை ஆழமடைதல் மற்றும் தரை உள்வாங்குதல்.
மரங்கள், மின் கம்பங்கள், வேலிகள் மற்றும் தொலைபேசி தூண்கள் சாய்வடைதல்.
கட்டிடங்களின் தரை மற்றும் சுவர்களில் புதிய வெடிப்புகள் தோன்றுதல் அல்லது விரிவடைதல்.
நிலத்திலிருந்து திடீரென புதிய நீரூற்றுகள் அல்லது சேற்று நீர் தோன்றுதல், அல்லது தற்போதுள்ள நீரூற்றுகள் தடைப்பட்டுப் போகுதல்.
இவ்வாறான அறிகுறிகள் தென்படும் பட்சத்தில், அந்த இடங்களிலிருந்து உடனடியாக மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு நகர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வழங்கும் அறிவுறுத்தல்களை துல்லியமாக பின்பற்றுமாறு



.jpg)






.jpeg)
.jpg)
