கம்பஹா, மகர பகுதிகளில் இன்று 12 மணி நேர நீர் விநியோகம் துண்டிப்பு.


 கம்பஹா மற்றும் மகர பிரதேச சபை பகுதிகளுக்கு இன்று புதன்கிழமை (27) 12 மணி நேரத்திற்கு நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை தெரிவித்துள்ளது.

இன்று புதன்கிழமை (27) மாலை 7 மணி முதல் நாளை (28) காலை 7 மணி வரை நீர் விநியோகம் துண்டிக்கப்படும் என சபை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் நடைபெறும் கட்டுமானப் பணிகள் தொடர்பான நீர்க் குழாய்களை இடமாற்றம் செய்வதற்கான அத்தியாவசியப் பராமரிப்புத் தேவையின் காரணமாக இந்த நீர் விநியோகம் துண்டிக்கப்படுவதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபை கூறியுள்ளது.