கெஸ்பேவவில் 204 மி.மீ மழைவீழ்ச்சி பதிவு.


நாட்டுக்கு அருகாமையில் நிலவும் குறைந்த அழுத்தத் தொகுதி காரணமாகத் தொடரும் கனமழையினால், மேல் மாகாணத்தின் கெஸ்பேவ பகுதியில் அதிகபட்சமாக 204 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

கடந்த 22 மணித்தியாலங்களில் கம்பஹா மாவட்டத்தில் வெயாங்கொடை பகுதியில் 145.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், வத்துபிட்டிவல பகுதியில் 105.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தில் கிலிமாலே பகுதியில் 121 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

களுத்துறை மாவட்டத்தில் பண்டாரகம பகுதியில் 102.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும், ஹொரணை பகுதியில் 101.5 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.

மேற்கு, சப்ரகமுவ, வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கும் திருகோணமலை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கும் கடும் மழை பெய்யும் என எச்சரிக்கையை விடுக்கப்பட்டுள்ளது.

மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்றையதினம் சில இடங்களில் 200 மில்லி மீற்றருக்கும் அதிகமான மிகக் கடும் மழை பெய்யக்கூடும்.

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சுமார் 100 மில்லிமீற்றர் அளவில் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.