
கோவணம் கட்டியிருப்பவரைப் பார்த்து முற்றிலும் நிர்வாணமாக இருப்பவர் கேலி செய்வது போன்ற நிலையிலேயே தற்போது பௌத்த மதத்தை விமர்சிப்பவர்கள் உள்ளனர் என கலகொட அத்தே ஞானசார தேரர் சாடியுள்ளார்.
பௌத்த சாசனம் குறித்து விமர்சனங்களை முன்வைத்து வரும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் (NGO) மற்றும் சில மாற்று மதக் குழுக்களுக்கு எதிராகப் கலகொட அத்தே ஞானசார தேரர் மிகக் கடுமையான எச்சரிக்கையை ஞானசார தேரர் விடுத்துள்ளார்.
"எங்கள் மத விவகாரங்களை நாங்களே பார்த்துக் கொள்வோம், இதில் வெளிநபர்கள் தலையிடத் தேவையில்லை" என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து மிகக் காட்டமாகப் பேசியுள்ள அவர்,
நிர்வாணமாக இருப்பவருக்குத் தனது சொந்த அவல நிலை தெரியாமல், கோவணம் கட்டியிருப்பவரைப் பார்த்துச் சிரிப்பது போன்றே இந்த பகுத்தறிவு என்ற போர்வையிலான விமர்சனங்கள் அமைந்திருப்பதாக அவர் மிகக் கடுமையான உதாரணத்துடன் சுட்டிக்காட்டினார்.மேலும், பௌத்த சாசனம் தொடர்பான உள்நாட்டு மற்றும் மத ரீதியான விடயங்களை எப்படிக் கையாள்வது என்பது குறித்து தமக்குத் தெளிவான புரிதலும் முதிர்ச்சியும் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
"எங்கள் சாசனம் குறித்த விடயங்களை நாங்களே கவனித்துக் கொள்கிறோம். இதற்கென எங்களிடம் முறையான வழிமுறைகள், போயா தினக் கலந்துரையாடல்கள் மற்றும் மகா சங்கத்தினரின் போதனைகள் உள்ளன" என்று அவர் வலியுறுத்திக் கூறியுள்ளார்.
குறிப்பாகச் சில கிறிஸ்தவ குழுக்கள் மற்றும் வெளிநாட்டு நிதி பெறும் தன்னார்வ தொண்டு நிறுவனப் பணியாளர்கள் பௌத்த மதத்தின் உள்விவகாரங்களில் தலையிடுவதை உடனடியாகத் தவிர்க்க வேண்டும் என்றும், ஞானசார தேரர் கூறியுள்ளார்.
தங்களின் மதக் கட்டமைப்பைச் சீரமைக்கத் தமக்குத் தேவையான ஒழுங்குமுறை மற்றும் சுயக் கட்டுப்பாடு ஏற்கனவே பௌத்த சாசனத்திற்குள் இருப்பதாகவும் ஞானசார தேரர் மீலும் தெரிவித்தார்.










.jpg)

