
மாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் இந்த ஆண்டுக்குள் நடத்த வேண்டும். தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டாக வலியுறுத்துள்ளது.
மேலும், பழையத் தேர்தல் முறைமையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்தவும், வேட்புமனுத் தாக்கலின் போது பெண்கள் மற்றும் இளைஞர் பிரதிநிதித்துவத்துக்கு சுய விருப்பத்தின் அடிப்படையில் 25% பிரதிநிதித்துவ ஒதுக்கீட்டை வழங்கவும் 43 அரசியல் கட்சிகள் ஏகமனதாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இணக்கம் தெரிவித்துள்ளன.












