புத்த பெருமானின் பிறப்பு, ஞானோதயம், பரிநிர்வாணமடைதல் ஆகிய மூன்று நிகழ்வுகளை முன்னிறுத்தி இன்று சனிக்கிழமை (30) பௌத்தர்களால் வெசாக் பௌர்ணமி தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
இன்று இலங்கையின் பல்வேறு பௌத்த வழிபாட்டுத் தலங்களிலும் ஏனைய பகுதிகளிலும் வெசாக் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
வெசாக் தினத்தை முன்னிட்டு நாட்டின் பல்வேறு இடங்களில் வெசாக் கூடுகள், தோரணங்கள், தானசாலைகள் அமைக்கப்பட்டிருப்பதை காண முடிகிறது.