சட்டவிரோத வாகன உதிரிப்பாகங்களால் பொருத்தப்பட்ட ஜீப் வண்டியுடன் சந்தேக நபர் கைது
நாட்டுக்குள் சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட வாகன உதிரிப்பாகங்களைப் பயன்படுத்தி பொருத்தப்பட்டதாகக் கூறப்படும் ஜீப் வண்டியொன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் 39 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேல் மாகாண தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால், வெள்ளிக்கிழமை (29) இரவு கொட்டாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட உதிரிப்பாகங்களைக் கொண்டு இந்த ஜீப் வண்டி பொருத்தப்பட்டுள்ளதாகவும், முறையான வருமான வரி அனுமதிப்பத்திரம், காப்புறுதிச் சான்றிதழ், புகைப் பரிசோதனை அறிக்கை எதுவுமின்றி இந்த வாகனம் செலுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், இந்த வாகனம் தொடர்பான போலி ஆவணங்களைத் தயாரித்தமை மற்றும் அவற்றைப் பயன்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழும் இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் விதாரந்தெனிய பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் மேல் மாகாண தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர்.









.jpg)



