வெசாக் தினத்தை முன்னிட்டு மதுபானசாலைகள் இரு நாட்களுக்கு பூட்டு
வெசாக் தினத்தை முன்னிட்டு நாளையும் (30) நாளை மறுதினமும் (31) நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவேண்டும் என இலங்கை மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைய இன்று (29) மதுபானசாலைகள் மூடப்படும் நேரத்திலிருந்து 2026.06.01ஆம் திகதி திறக்கப்படவிருக்கும் நேரம் வரை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்பட்டிருக்கவேண்டும் என இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.
இவ்விரு தினங்களிலும், மதுவரி அனுமதிப்பத்திரம் பெற்ற நிறுவனங்களை மூட நடவடிக்கை எடுக்காத அல்லது அனுமதிப்பத்திர நிபந்தனைகளை மீறும் ஏதேனும் நிறுவனங்கள் இருப்பின், அது குறித்த 1913 என்ற தொலைபேசி இலக்கம் ஊடாக அறியத்தருமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
அவ்வாறு அனுமதிப்பத்திர நிபந்தனைகளை மீறும் ஏதேனும் நிறுவனங்கள் காணப்படின், அவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துமாறு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுவரி அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக மதுவரி திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.












.jpg)
