கந்தானை மற்றும் மதுரங்குளி பகுதிகளில் சட்டவிரோத மதுபானத்துடன் மூவர் கைது!


 வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினர் செவ்வாய்க்கிழமை (12) சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது, கந்தானை மற்றும் மதுரங்குளி பகுதிகளில் சட்டவிரோத மதுபானங்களுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கந்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கன்கொட பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சோதனையில், 75 லீற்றர் (100 போத்தல்கள்) சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு கந்தானை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 50 வயதுடைய கன்கொட, கந்தானை பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

இதேவேளை, மதுரங்குளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட '03ஆம் கட்டை' பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் ஒருவரிடமிருந்து 90 லீற்றர் (120 போத்தல்கள்) மதுபானமும், மற்றையவரிடமிருந்து 75 லீற்றர் (100 போத்தல்கள்) மதுபானமும் கைப்பற்றப்பட்டதையடுத்து, சந்தேக நபர்கள் மதுரங்குளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 24 மற்றும் 35 வயதுடைய, மதுரங்குளி பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

மேலும், இந்த சம்பவங்கள் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.