![]() |
பாராளுமன்றத்தில் புதன்கிழமை (10) இடம்பெற்ற இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் கீழ் விதிகள் மற்றும் அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் தீர்மானம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
மக்கள் முகம் கொடுத்து வரும் அழுத்தம், மக்கள் முகம் கொடுத்து வரும் அசௌகரியம், மக்களின் விரக்தி, மற்றும் மக்களால் வாழ முடியாத நிலை போன்ற வார்த்தைகளைப் பேசுவதற்கு தடை பிறப்பிக்கும் நிலை இன்று நாட்டில் ஏற்பட்டுள்ளது . நாட்டின் தொழிற்சாலைகள் வீழ்ச்சி கண்டு, தொழில் இழப்புகள் ஏற்பட்டு, வறுமை மட்டம் 30-40 சதவீதத்தை எட்டியுள்ள ஒரு காலகட்டத்தில், அரசாங்கம் மக்கள் குறித்து சிந்திக்காமல் வரிக்கு மேல் வரிகளை விதித்து வருகிறது.
அரசாங்கம் மக்கள் மீது அதிக வரிச்சுமையை சுமத்திய போதிலும், சிகரெட் மீதான வரியை 74வீதத்திலிருந்து 66.8 வீதமாகக் குறைத்துள்ளது. இதனால், மக்களுக்கு நிவாரணம் அளித்திருக்கக்கூடிய 17.3 பில்லியன் ரூபா வருவானத்தை இழந்துள்ளது. எனவே இப்போதாவது மக்கள் தொடர்பில் சிந்தித்து, சிகரெட் மீதான வரியை அதிகரித்து, அந்த வரி வருமானத்திலிருந்து மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றேன் என்றார்.







.jpg)



.jpeg)
.jpeg)
