
இலங்கையிலேயே முதன்முறையாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 'மினி உசி' ரக தானியங்கி துப்பாக்கி உள்ளிட்ட பல ஆயுதங்கள், கொழும்பில் உள்ள பொது மயானம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், பொலிஸ் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
டுபாயில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட 'மஹவத்தே சாமர' என்ற குற்றவாளியிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் வெளிவந்த தகவல்களின் அடிப்படையிலேயே இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
சமீபத்தில் டுபாய் நாட்டில் இருந்து நாடு கடத்தப்பட்ட மஹவத்தே சாமர என்ற குற்றவாளி, தற்போது பொலிஸ் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவரிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணைகளின் மூலம் கிடைத்த தகவலுக்கு அமைய, கொழும்பு பொது மயானத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இந்த துப்பாக்கிகளும் தோட்டாக்களும் கண்டெடுக்கப்பட்டன.
இவற்றில் 'மினி உசி' ரக தானியங்கி துப்பாக்கி ஒன்று, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்றும், ஒரு மெகசின் மற்றும் 3 தோட்டாக்கள் ஆகியன அடங்கும்.
இந்த மினி உசி ரக துப்பாக்கி உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது என்பது கண்டறியப்பட்டுள்ளதுடன், இதற்கு முன்னர் இலங்கையின் எந்தவொரு பொலிஸ் பிரிவினராலும் இந்த வகையான துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்படவில்லை.
இவ்வாறானதொரு துப்பாக்கி குறித்து கடந்த காலங்களில் பொலிஸாருக்கு தகவல் கிடைத்திருந்த போதிலும், அதனை கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது.
தங்களது எதிராளிகளை பயமுறுத்துவதற்காகவே இவர்கள் இந்த மினி உசி ரக துப்பாக்கியைப் பயன்படுத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.





.jpg)




.jpg)

