கொழும்பில் புதன்கிழமை (24) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்:
கடந்த காலங்களில் நிலவிய இலக்கத் தகடு பற்றாக்குறை காரணமாக வாகன உரிமையாளர்களுக்கு தற்காலிக அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அதற்கமைய, தற்காலிகமாக வெள்ளை நிறப் பின்னணியில் கருப்பு நிற எழுத்துக்களைக் கொண்ட எ4 தாள்களைப் பயன்படுத்தி மட்டுமே இலக்கத் தகட்டைக் காட்சிப்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
எனினும், முறையான தரநிலைகளைப் பின்பற்றாமல், தன்னிச்சையாகத் தங்களுக்கு விருப்பமான பல்வேறு நிறங்களிலும், வடிவங்களிலும் இலக்கத் தகடுகளைப் பொருத்துவதற்கு எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.
இவ்வாறான சட்டத்துக்கு புறம்பான இலக்கத் தகடுகளைத் தயாரித்துப் பயன்படுத்தும் வாகன உரிமையாளர்களின் வாகனங்களைச் சோதனைக்குட்படுத்தி, அவர்களுக்கு எதிராகத் தாமதமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அனைத்துப் பொலிஸ் நிலையங்களுக்கும் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக மேலும் குறிப்பிட்டார்.




.jpg)








