களு கங்கையின் பிரதான கிளை ஆறுகளில் ஒன்றான 'குடா ஓயா'வின் நீர்மட்டம் தற்போது எச்சரிக்கை மட்டத்தை எட்டியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குடா ஓயா ஆற்றின் நீர்மட்டம் உயர்வடைந்து வருவதன் காரணமாக, ஆற்றங்கரையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் அவ்வீதிகளைப் பயன்படுத்தும் பயணிகள் அனைவரும் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.