ஸ்ரீ மாவேற்குடா பிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேக நிகழ்வு

 கிழக்கு இலங்கையில் பிரசித்தி பெற்றதும் தொன்மை வாய்ந்ததுமான ஸ்ரீ மாவேற்குடா பிள்ளையார் ஆலயத்தின் புனராவர்த்தன அஷ்டபந்தன நவகுண்ட மகா கும்பாபிஷேக நிகழ்வு இன்று காலை சுபமுகூர்த்த வேளையில் பக்திப்பூர்வமாக நடைபெற்றது.

 இவ்விழா ஆலயத்தின் பிரதிஷ்டா பிரதம குரு சிவஸ்ரீ மு. கு. சச்சிதானந்தமூர்த்தி குருக்கள் தலைமையில், அடியார்களின் "அரோகரா" கோஷத்திற்கு மத்தியில் சிறப்பாக இடம்பெற்றது. கடந்த 20ஆம் திகதி இவ்வாலயத்தின் கும்பாபிஷேகக் கிரியைகள் ஆரம்பமாகியதுடன், 24ஆம் திகதி எண்ணெய் காப்புச் சாத்தும் நிகழ்வும் நடைபெற்றது. 

 இன்று அதிகாலை புண்ணியாகவாசனம், யாக பூஜை, விசேட பூஜை, வேத தோத்திர பாராயணம் ஆகியன இடம்பெற்று, மங்கள வாத்தியங்கள் முழங்க அடியார்களின் "அரோகரா" கோஷத்திற்கு மத்தியில் எம்பெருமானின் கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. ஆலயத்தின் மகா கும்பாபிஷேக நிகழ்வை முன்னிட்டு, நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் பெருமளவிலான பக்த அடியார்கள் வருகை தந்து கலந்து சிறப்பித்தனர்.