உயிர்க்காப்பு துப்பாக்கி உரிமம் வைத்திருப்பவர்களுக்கான விசேட அறிவிப்பு
2026 ஆம் ஆண்டிற்கான உரிமங்களை புதுப்பிப்பதற்கு இணையாக, உயிர்க்காப்பு துப்பாக்கி உரிமம் வைத்திருப்பவர்களின் துப்பாக்கிகளுக்கான சான்றிதழ் ஒன்றை வழங்குவது தொடர்பாக பொலிசாரால் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, உரிமத்தைப் பெற்று அரை வருடம் (ஆறு மாதங்கள்) நிறைவடையும் போது, அதற்கு அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு துப்பாக்கியை சமர்ப்பித்து, துப்பாக்கியின் செயல்பாடு மற்றும் அதன் இலக்கம், உரிமத்தின் இலக்கத்துடன் ஒத்துப்போகிறது என்பதற்கான சான்றிதழைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என பாதுகாப்பு சபையினால் அனைத்து உயிர்க்காப்பு துப்பாக்கி உரிமங்களையும் புதுப்பித்துக் கொண்ட உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இனிவரும் காலங்களில் ஒவ்வொரு அரை வருடத்திற்கும் உயிர்க்காப்பு துப்பாக்கி உரிமம் வைத்திருப்பவர்களின் துப்பாக்கிகள் மற்றும் உரிமங்களை மேற்கூறியவாறு பரிசோதித்து, அந்த சான்றிதழை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொலிஸ் அதிபரினால் அனைத்து பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, 2026 ஆம் ஆண்டிற்குரிய உரிமத்தைப் பெற்று அரை வருடம் நிறைவடையும் போது, அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு துப்பாக்கியைச் சமர்ப்பித்து, அதன் செயல்பாடு மற்றும் இலக்கம் ஆகியவை உரிமத்தின் இலக்கத்துடன் ஒத்துப்போகிறது என்பதற்கான சான்றிதழைப் பெற்றுக்கொள்ளுமாறு அந்த ஆண்டிற்கான உயிர்க்காப்பு துப்பாக்கி உரிமங்களைப் புதுப்பித்துக் கொண்ட அனைத்து உரிமையாளர்களுக்கும் பொலிஸார் மேலும் அறிவித்துள்ளனர்.







.jpg)



.jpg)

