கைதான சரித் அபேசிங்க தொடர்பில் ஒழுக்காற்று விசாரணை .


இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்க தொடர்பில் ஒழுக்காற்று விசாரணை நடத்தப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

"நிச்சயமாக ஒழுக்காற்று விசாரணை நடத்தப்படும். எடுக்கக்கூடிய மிகக் கடுமையான நடவடிக்கை நிச்சயமாக எடுக்கப்படும். ஏனெனில் எமது கட்சியில் தப்பு செய்தவர்களுக்கோ, குற்றவாளிகளுக்கோ எந்தவொரு சந்தர்ப்பமும் இடமும் கிடையாது" என அவர் மேலும் தெரிவித்தார்.