
கொழும்பு-8, டட்லி சேனாநாயக்க மாவத்தையில் (காசல் வீதி) அமைந்துள்ள சுகாதார மற்றும் ஊடக அமைச்சுக்கு சொந்தமான புதிய கட்டிடத்தில் உள்ள பிரிவுகளைத் தொடர்புகொள்வதற்காக 011-2112700 என்ற புதிய பொதுத் தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் வசதிக்காக இந்த இலக்கம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் லக்ஷ்மேந்திர தமயந்தகுமார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, 'சுவசிரிபாய' வளாகத்திலிருந்து புதிய கட்டிடத்திற்கு 37 பிரிவுகள் மாற்றப்பட்டுள்ளதுடன், 'மெடி ஹவுஸ்' கட்டிடத்திலிருந்து 14 பிரிவுகள் சுவசிரிபாய கட்டிடத்துக்கு மாற்றப்பட்டுள்ளன.
புதிய கட்டிடத்தின் தரைமாடியில் தபால், விநியோகம், பராமரிப்பு மற்றும் உள்வாரி கணக்காய்வு பிரிவுகளும், ஏனைய மாடிகளில் பொது சுகாதார சேவைகள், நிர்வாகம், ஓய்வூதியம், போக்குவரத்து மற்றும் பல் மருத்துவ சேவைகள் உள்ளிட்ட முக்கிய பிரிவுகளும் இயங்குகின்றன. அதேநேரம், 'மெடி ஹவுஸ்' கட்டிடத்திலிருந்து சுவசிரிபாயவுக்கு உள்நாட்டு மருத்துவ அபிவிருத்தி, பொறியியல் சேவை, மனநல பிரிவு, மனிதவள மேலாண்மை மற்றும் தேசிய சிறுநீரக நோய் தடுப்புப் பிரிவு உள்ளிட்ட 14 பிரிவுகள் மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.







.jpg)



.jpeg)
