ஹொரகொல்ல தேசிய பூங்கா மற்றும் மேற்கு மாகாண வனவிலங்கு அலுவலக அதிகாரிகள், கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
கோபேய்கனே பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர், குறித்த பொருட்களை விற்பனை செய்யத் தயாராக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர் இந்த யானைத் தந்தப் பொருட்களை எவ்வாறு பெற்றார் என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களும் அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், யானைத் தந்தம் உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட விலங்குகளின் உடற்பாகங்களை வைத்திருத்தல், எடுத்துச் செல்லுதல், காட்சிப்படுத்துதல் அல்லது விற்பனை செய்தல் விலங்குகள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளதாக நினைவூட்டியுள்ளது. மேலும், யானைத் தந்த ஆபரணங்கள் உள்ளிட்ட விலங்கு உடற்பாகங்களின் சட்டவிரோத வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கு எதிராக தொடர்ந்தும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







.jpg)






