
குறித்த விடயம் சம்பந்தமாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
டெங்கு நோயாளர்கள் பதிவானதன் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட கொழும்பிலுள்ள கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகம், சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தல்களுக்கு அமைய எதிர்வரும் 13ஆம் திகதி மீண்டும் திறக்கப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
தற்போது தேசிய மட்டத்தில் டெங்கு தொற்று நிலைமை காணப்படுவதாக சுகாதாரப் பிரிவினர் அறிவித்துள்ளனர். அதேபோல், அதிக அவதானம் மிக்க பல மாவட்டங்களும் பிராந்தியங்களும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
கல்வி மற்றும் உயர் கல்வி நிறுவனங்களை இந்த டெங்கு தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காக சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
உயர் கல்வி நிறுவனங்களில் டெங்கு நோயாளர்கள் கொத்தணிகளாகப் பதிவானால், சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தல்களுக்கு அமைய அவற்றை மூட வேண்டியேற்படும். கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ளமைக்கும் அதுவே காரணமாகும்.
அதேபோன்று, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் உரிய வழிகாட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன என்றார்.






.jpg)






