வெருகல் - பூநகர் பகுதியிலுள்ள பனிச்சங்குளத்தின் புனர் நிர்மாண வேலைகள் ஆரம்பம்!


திருகோணமலை மாவட்டம் வெருகல் - பூநகர் பகுதியிலுள்ள பனிச்சங்குளத்தின் புனர் நிர்மாண வேலைகளை திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் சனிக்கிழமை (04) ஆரம்பித்து வைத்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசனின் பன்முகடுத்தப்பட்ட 1.5 மில்லியன் ரூபாய் செலவில் பனிச்சங்குளம் புனர் நிமாணம் செய்யப்படவுள்ள நிலையில் ஆரம்ப நிகழ்வு மத அனுஷ்டானங்களுடன் அடிக்கல் நடப்பட்டு இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வெருகல் பிரதேச சபையின் தவிசாளர் சேதுராமன் கருணாநிதி ,வெருகல் பிரதேச செயலாளர் எம்.ஏ.அனஸ் , வெருகல் கமநல சேவை நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் குமார் சாந்தகுமார் ,வெருகல் பிரதேச சபை உறுப்பினர்கள், விவசாய சங்கத்தினர் என பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.