
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் பாதாள உலக கும்பல்கள் மற்றும் போதைப்பொருள் விவகாரத்தில் தொடர்புடைய தரப்பினர் நேரடியாக தொடர்புபட்டுள்ளார்கள் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இன்று செவ்வாய்க்கிழமை (7) நடைபெற்ற பாராளுமன்ற அமர்விலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அவர் மேலும் கூறுகையில்,
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் தொடர்பில் இன்று காலை சிறைசாலை அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டேன்.
இவ்வாறான நிலை ஏனைய சிறைச்சாலைகளில் ஏற்படாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் பாதாள உலக கும்பல்கள் மற்றும் போதைப்பொருள் விவகாரத்தில் தொடர்புடைய தரப்பினர் நேரடியாக தொடர்புபட்டுள்ளார்கள்.
கைதிகளில் ஒரு தரப்பினர் முதலில் சிறைச்சாலைக்குள் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.விகள் மற்றும் போதைப்பொருள் ஆராய்வு ஸ்கேன் இயந்திரத்தை உடைத்துள்ளார்கள். இது திட்டமிட்டதொரு செயற்பாடாகும் என்றும் கூறியுள்ளார்.






.jpg)


.jpg)


.jpg)
