குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
கடந்த 20ஆம் திகதி வவுனியா, தேக்கவத்தை பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் நுழைந்து வீட்டின் அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த சுமார் 16.750 பவுண் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
இது தொடர்பாக வவுனியா தலைமை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்தது.
அதற்கமைய, விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், சம்பவத்துடன் தொடர்புடைய 4 பேரை கைது செய்துள்ளதுடன், கொள்ளையிடப்பட்ட நகைகளையும் அவர்களிடமிருந்து கைப்பற்றியுள்ளனர்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர், கொள்ளையிடப்பட்ட வீட்டுக்கு அருகில் வசிப்பவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், குறித்த நபர் கொள்ளையிட்ட ஒரு பகுதி நகைகளை யாழில் அமைந்துள்ள அவரின் வீட்டின் பின்புறத்தில் புதைத்து வைத்துள்ளார்.
அத்துடன், ஒரு தொகுதி நகைகள் வவுனியா கடைவீதியில் அமைந்துள்ள பிரபல அடகு நிலையத்தில் அடகு வைக்கப்பட்டதையடுத்து, அவையும் மீட்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.




.jpg)
.jpg)
.jpg)




.jpg)