.jpg)
ஆகஸ்ட் மாதத்திற்குரிய 'அஸ்வெசும' நலன்புரிக் கொடுப்பனவானது எதிர்வரும் 19 ஆம் திகதி பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்யப்படும் என நலன்புரிப் நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு அச் சபை இத் தகவலைக் குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய, அஸ்வெசும நலன்புரிப் நன்மைகள் திட்டத்தின் முதலாம் கட்டத்தின்கீழ் 999,502 பயனாளி குடும்பங்களுக்கு 9 பில்லியன் 241 மில்லியன் 892 ஆயிரத்து 500 ரூபா தொகை வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்யப்படவுள்ளது.
அத்துடன், இத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின்கீழ் 212,955 பயனாளி குடும்பங்களுக்கு 2 பில்லியன் 321 மில்லியன் 735 ஆயிரத்து ரூபா தொகையை வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.




.jpg)







.jpg)