கொழும்பு கோட்டை பகுதியில் பணப் பரிமாற்ற வர்த்தகத்தில் ஈடுபடும் நபர் ஒருவர், பொருட்களை இறக்குமதி செய்யாமல் குறித்த பெருந்தொகையான வெளிநாட்டு நாணயத்தை நாட்டிலிருந்து பரிமாற்றியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பணப் பரிமாற்றம் பல்வேறு வங்கிச் செயற்பாடுகள் ஊடாக மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என விசாரணையாளர்கள் சந்தேகிக்கின்றனர்.
அதன்படி, இவ்வளவு பெரிய தொகை எவ்வாறு பொருட்களின் இறக்குமதியின்றி வெளிநாட்டுக்கு பரிமாற்றப்பட்டது என்பது தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக நான்கு தனியார் வங்கிகளின் முகாமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு முன்னெடுத்து வருகிறது.





.jpg)







.jpg)