2027ஆம் ஆண்டில் பரீட்சைகள் நடைபெறும் திகதிகள் பற்றி பரீட்சைத் திணைக்களம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு


2027ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள அனைத்து முக்கிய பாடசாலைப் பரீட்சைகளுக்கான திகதிகளை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இன்று (24) பரீட்சைத் திணைக்களத்தின் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே வெளியிட்ட பரீட்சை அட்டவணையின்படி,

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2027 ஆகஸ்ட் 1ஆம் திகதி நடைபெறும்.

க.பொ.த உயர்தரப் பரீட்சை 2027 ஆகஸ்ட் 3ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 28ஆம் திகதி வரை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொதுத் தகவல் தொழில்நுட்பப் (GIT) பரீட்சை 2027 ஒக்டோபர் 24ஆம் திகதி நடைபெறும்.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2027 டிசம்பர் 7ஆம் திகதி முதல் டிசம்பர் 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.