300(kW) அதிக திறன் கொண்ட சூரிய மின் தகடுகள் தற்காலிகமாக செயலிழப்பு


விடுமுறை காலத்தில் மின்சாரத் தேவை குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதால், 300 கிலோவாட்டுக்கு மேற்பட்ட திறன் கொண்ட Rooftop Solar அமைப்புகளின் மின் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்துமாறு National System Operator (Pvt) Ltd அறிவித்துள்ளது.

இதன்படி, ஓகஸ்ட் 27 முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தினமும் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை குறித்த சூரிய மின் உற்பத்தி அமைப்புகள் செயலிழக்கச் செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேசிய மின் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்காக இந்த தற்காலிக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.