
குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த விசேட கல்வித் தேவையுடைய மாணவர்களுக்கு மாதாந்தம் 5,000 ரூபா கொடுப்பனவு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு அமைய இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதற்காக நாடளாவிய ரீதியில் பாடசாலைகளிடமிருந்து ஏற்கனவே விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்த நிலையில், 5,530 மாணவர்கள் குறித்த கொடுப்பனவைப் பெறுவதற்குத் தகுதியுடையவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தகுதி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் மாதாந்தம் 5,000 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்குத் தேவையான நிதியை ஒதுக்குவது தொடர்பில், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் என்ற வகையில் பிரதமர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.




.jpg)





.jpg)
