செப்டெம்பர் 5 முதல் ஜனாதிபதி தலைமையில் மாவட்ட மட்ட மக்கள் கூட்டங்கள் –அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் எதிர்வரும் மாதம் 05 ஆம் திகதி முதல் மாவட்ட மட்டத்தில் விசேட மக்கள் கூட்டங்களை நடத்தவுள்ளோம். மக்கள் யார் பக்கம் உள்ளார்கள் என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.பொருளாதார மீட்சி தொடர்பில் ஆலோசனை வழங்கும் நாமல் ராஜபக்ஷ தனது குடும்பம் தான் நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியது என்பதை பகிரங்கமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிடுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
பொருளாதாரம் பாதிக்கப்பட்டு விட்டது, நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று நாமல் ராஜபக்ஷ தற்போது முதலைக் கண்ணீர் வடிக்கிறார். அரசியல் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார். பொருளாதார பாதிப்புக்கான அடிப்படை காரணத்தை எவ்விடத்திலும் குறிப்பிடுவதில்லை.
2022 ஆம் ஆண்டு ராஜபக்ஷ குடும்பம் பொருளாதார ரீதியில் எடுத்த தவறான தீர்மானங்களினால் தான் நாடு வங்குரோத்து நிலையடைந்தது என்பதை உயர்நீதிமன்றம் ஏகமனதாக அறிவித்துள்ளது. பொருளாதார பாதிப்பில் இருந்து மீள்வதற்கு தான் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்பட்டது.
பொருளாதார மீட்சி தொடர்பில் ஆலோசனை வழங்கும் நாமல் ராஜபக்ஷ தனது குடும்பம் தான் நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியது என்பதை பகிரங்கமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அரசாங்கத்தை வீழ்த்துவோம், மக்களை ஒன்றிணைப்போம் என்று ஜி.எல்.பீரிஸ் வீட்டில் எதிர்க்கட்சியினர் இரவிரவாக ஒன்று கூடாமல் மக்கள் மத்தியில் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தேசிய மக்கள் சக்தியை பலப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். எதிர்வரும் மாதம் 05 ஆம் திகதி முதல் ஜனாதிபதி தலைமையில் மாவட்ட மட்டத்தில் மக்கள் சந்திப்புக்கள் இடம்பெறவுள்ளது என்றார்.


.jpg)


.jpg)
.jpg)
.jpg)


.jpg)

