தேசிய “Rataama Ekatata” வேலைத்திட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை (28) நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
போதைப்பொருள் பாவனையுடன் தொடர்புடைய உயிரிழப்புகளில் புகைப்பிடித்தலே முக்கிய காரணியாக காணப்படுவதாகவும், மது பாவனையால் நாளொன்றுக்கு சுமார் 10 முதல் 15 பேர் வரை உயிரிழப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சட்டவிரோத போதைப்பொருட்களின் பயன்பாடும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்த அவர், புகையிலை மற்றும் மது போன்ற சட்டபூர்வ போதைப்பொருட்களின் பயன்பாடு பின்னர் சட்டவிரோத போதைப்பொருள் பாவனைக்கான ஆரம்பப் புள்ளியாக அமையக்கூடும் என்றும் சுட்டிக்காட்டினார்.
ஹெரோயின் பயன்படுத்துபவர்களில் பலர் அதற்கு முன்னர் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததாகவும், கஞ்சா பயன்படுத்துபவர்களில் பலர் அதற்கு முன்னர் மது அல்லது சிகரெட் பயன்படுத்தியிருந்ததாகவும் கிடைக்கப்பெற்றுள்ள ஆதாரங்கள் தெரிவிப்பதாக அவர் கூறினார்.
எனினும், சட்டவிரோத போதைப்பொருட்களால் நேரடியாக ஏற்படும் உயிரிழப்புகள் குறித்து இதுவரை விரிவான ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும், தற்போதுள்ள மதிப்பீடுகளின்படி ஏனைய சட்டவிரோத போதைப்பொருட்களால் நாளொன்றுக்கு 10 முதல் 15 பேர் வரை உயிரிழக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.
புகைப்பிடித்தல், மது மற்றும் ஏனைய போதைப்பொருட்களுடன் தொடர்புடைய உயிரிழப்புகளை ஒன்றாகக் கணக்கிடும்போது, இலங்கையில் நாளொன்றுக்கு 80 முதல் 100 பேர் வரை உயிரிழப்பதாக மதிப்பிடப்படுவதாக கலாநிதி மனோஜ் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.




.jpg)
.jpg)
.jpg)

.jpg)
.jpg)

.jpg)
.jpg)
