.jpg)
சிறைச்சாலைகளில் தொடர்ச்சியாக ஏற்பட்டுவரும் அமைதியின்மை தொடர்பில், நீதி அமைச்சரும் சிறைச்சாலைகளுக்குப் பொறுப்பான அமைச்சரும் உடனடியாக பாராளுமன்றத்தில் விளக்கமளிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், குருவிட்ட சிறைச்சாலையில் ஒரு கைதியும், மெகசின் சிறைச்சாலையில் மற்றொரு கைதியும் உயிரிழந்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.
மேலும், பள்ளன்சேனை சிறைச்சாலையிலும் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன எனக் குறிப்பிட்ட அவர், நாட்டின் சிறைச்சாலை பாதுகாப்பு நிலைமை குறித்து அரசாங்கம் உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.





.jpg)







.jpg)