அரசாங்கம் வீழ்ச்சியடைந்த பின்னர் ராஜபக்‌ஷக்களின் வேலையென்று கொக்கரிக்கக்கூடாது - நாமல் ராஜபக்‌ஷ


பொலிஸ் மாஅதிபர் பெலவத்த அலுவலகத்துக்கு தேவையானவாறே செயற்படுகின்றார். அரசியல்வாதிகள் கொடுக்கும் கயிற்றை சாப்பிட வேண்டாம் என்று பொலிஸ் மாஅதிபரிடம் கேட்டுக்கொள்கின்றேன். இதற்கு முன்னர் இதேபோன்று கட்சிகளுக்காக கடைக்கு சென்ற பொலிஸ் மாஅதிபருக்கு ஏற்பட்ட நிலைமை தொடர்பில் நினைத்துப் பார்க்க வேண்டும். அரசியலுக்காக பொலிஸ் மாஅதிபரை நிர்க்கதியாக்கக் கூடாது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (4) நடைபெற்ற கல்விக்கான செலவினத் தலைப்பு மீதான குறைநிரப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

விவசாயிகளுக்கு போதிய நிவாரணம் வழங்கியுள்ளோம். எந்த பிரச்சினையும் இல்லை என்று அரசாங்கம் குறிப்பிடுகிறது. ஆனால் விவசாயிகள் வீதியில் இறங்கிப் போராடுகிறார்கள். அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு வழங்கிவிட்டால் ஏன் விவசாயிகள் போராடுகிறார்கள்.

தித்வா தாக்குதலைத் தொடர்ந்து ஜனாதிபதி இந்த பாராளுமன்றத்தில் வரம்பில்லாத வாக்குறுதிகளை வழங்கினார். அவை ஏதும் இன்று வரை நிறைவேறவில்லை. பல மாதங்கள் கடந்துவிட்டன. இரண்டாவது மழையும் வந்துவிட்டது. சில பிரதேசங்களில் வீடுகளுக்கு போக வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தபோது அதிகாரிகள் பலவந்தமான அந்த மக்களை மீள அங்கு குடியேற்றினர். இப்போது அந்த வீடுகளும் கிராமங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கு யார் பொறுப்புக்கூறுவது?

அத்துடன் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த மாணவர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க முன்னெடுக்கும் நடவடிக்கை என்ன என்று கேட்கின்றோம். இந்த மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சாதாரண விடயமாக பார்க்க வேண்டும்.

இதேவேளை காணி பிரச்சினை விடயத்தில் அரசாங்கத்திடம் காணிகள் இல்லை என்றும் விகாரைகள், தேவாலயங்களுக்கு வேண்டியளவுக்கு காணிகள் உள்ளன என்றும் கூறுகின்றனர். வேண்டுமென்றால், அது தொடர்பில் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்க முடியும்.

பாராளுமன்றத்தை தீ வைக்க வந்த கட்சியின் நீதி அமைச்சர் இருக்கும் அரசாங்கமும் புரிதலுடன் பொய்களை கூறும் அரசாங்கமும் இதுவாக இருக்கின்றது. நீங்கள் முதலில் அரசாங்கம் போன்று நடந்துகொள்ளுங்கள். முழுமையாக பொலிஸ் அரசியல்மயமாகியுள்ளது. பொலிஸ்மா அதிபர் பெலவத்த அலுவலகத்திற்கு தேவையானவாறே செயற்படுகின்றார்.

அரசியல்வாதிகள் கொடுக்கும் கயிற்றை சாப்பிட வேண்டாம் என்று பொலிஸ்மா அதிபரிடம் கேட்டுக்கொள்கின்றேன். இதற்கு முன்னர் இதேபோன்று கட்சிகளுக்காக கடைக்கு சென்ற பொலிஸ்மா அதிபருக்கு ஏற்பட்ட நிலைமை தொடர்பில் நினைத்துப்பார்க்க வேண்டும். ன்று கட்சிகளுக்காக கடைக்கு சென்ற பொலிஸ்மா அதிபருக்கு ஏற்பட்ட நிலைமை தொடர்பில் நினைத்துப்பார்க்க வேண்டும். அரசியலுக்காக பொலிஸ்மா அதிபரை நிர்க்கதியாக்கக்கூடாது.

இறுதிக் காலம் ஆகும் போது நடக்க வேண்டியது நடக்கும். புரிதலுடன் பொய்களை கூற முடியும். தேவையானவாறு குற்றச்சாட்டுகளை முன்வைக்க வேண்டும். ஆனால் இறுதியில் அரசாங்கம் வீழ்ச்சியடைந்த பின்னர் ராஜபக்‌ஷக்களின் வேலையென்று கொக்கரிக்கக்கூடாது. ஆளும் தரப்பை போன்று பின்கதவால் போகின்றவர்கள் நாங்கள் அல்ல என்றார்.