
தற்போதைய ஆட்சியில் விரக்தியடைந்துள்ள மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்துள்ளனர். எனவே நாட்டின் அடுத்த ஜனாதிபதி சஜித் பிரேமதாசவே ஆவார். அதன்போது, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ முடிந்தளவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியையாவது கைப்பற்ற வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை (23) கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போதைய ஆட்சி முறையால் விரக்தியடைந்துள்ள மக்கள் ஒரு ஜனநாயக ரீதியான மாற்றத்துக்காகக் காத்துகொண்டிருக்கிறார்கள். எனவே, நாட்டின் அடுத்த ஜனாதிபதி சஜித் பிரேமதாசவே நிச்சயமாக பொறுப்பேற்பார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரசிங்கவும் இதற்கான ஆதரவையும் ஆசீர்வாதத்தையும் வழங்குவார். இதேவேளை, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுகவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ முடிந்தளவுக்கு கஷ்டப்பட்டு எதிர்க்கட்சித் தலைவர் பதவியையாவது கைப்பற்ற வேண்டும்.
மேலும், தற்போதைய அரசாங்கம் மாகாணப் சபை தேர்தலை நடத்தாமல் தப்பியோடப் பார்கிறார்கள். தேர்தல்கள் ஒத்திவைக்கப்படாமல் ஜனநாயக முறைப்படி நடத்தப்பட்டு மக்கள் அவர்களது சரியான தீர்ப்பை வழங்க சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும். அவ்வாறு நடத்தப்படாமல் இருப்பதற்கு காரணம் ஜே.வி.பி நாட்டின் ஒரே அரசியல் கட்சியாக மாற்றும் நோக்கில் ஆகும். அதற்காக பெலவத்தையிலிருந்து மிகவும் நுட்பமான முறையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசாங்கத்தின் இத்தகைய சர்வாதிகார போக்கையும் ஜனநாயத்திற்கு எதிரான நகர்வுகளையும் மக்கள் சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.




.jpg)
.jpg)

.jpg)


.jpg)
