மஹரக பகுதியில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
அரசியலமைப்பின் 22 ஆம் திருத்தம் தொடர்பில் எதிர்க்கட்சியினர் தான் தவறான நிலைப்பாட்டை தோற்றுவித்துள்ளார்கள். ஒருசிலர் மாகாநாயக்கர்களிடமும் தவறான விடயங்களை குறிப்பிட்டுள்ளார்கள்.
ஊழல்வாதிகளும், படுகொலையாளிகளும் சிறை செல்வது அவர்களின் தனிப்பட்ட பிரச்சினையே தவிர அது நாட்டு மக்களின் பிரச்சினையல்ல,நீதிபதிகளின் பதவிக்காலத்தை இரண்டு ஆண்டுகளுக்கு அதிகரிப்பதால் நீதித்துறையின் சுதந்திரத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.
நீதித்துறை கட்டமைப்பு முழுமையாக மறுசீரமைக்கப்படும் என்று மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.அதன் ஒரு கட்டமாகவே நீதிபதிகளின் பதவிக்காலத்தை இரண்டு ஆண்டுகளுக்கு அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.
நீதிபதிகளின் பதவிக்காலத்தை இரண்டு ஆண்டுகளுக்கு அதிகரிப்பதால் நீதித்துறையின் சுதந்திரத்துக்கும், சுயாதீனத்துக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்பதை உறுதியாக குறிப்பிட்டுக் கொள்கிறோம். நீதித்துறையின் செயற்பாடுகள் வினைத்திறனாக்கப்படும். வழக்கு விசாரணைகள் துரிதப்படுத்தப்படும் என்றார்.


.jpg)


.jpg)
.jpg)
.jpg)




.jpg)