
குருவிட்ட சிறைச்சாலையில் இன்று (07) கைதிகள் மத்தியில் மீண்டும் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிறைச்சாலை பேச்சாளர் கூறுகையில், அமைதியின்மை முதன்முதலில் நேற்று (06) இரவு ஏற்பட்டதையடுத்து, அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாக தெரிவித்தார்.
எனினும், இன்று காலை மீண்டும் கைதிகள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டதால், சிறைச்சாலைக்குள் மீண்டும் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாகவும், நிலைமையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





.jpg)







.jpg)