.jpg)
கொழும்பிலிருந்து முல்லைத்தீவு வரை பயணிக்கும் தனியார் பேருந்து ஒன்றில் ‘ஐஸ்’ போதைப்பொருளைப் பயன்படுத்திப் பேருந்தைச் செலுத்திய சாரதியும், அவருக்கு உடந்தையாக இருந்த பேருந்தின் உரிமையாளரும் புளியங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் - கொழும்பு மற்றும் முல்லைத்தீவு இடையே பயணிக்கும் சில தனியார் பேருந்துகளின் சாரதிகள் நீண்டகாலமாக 'ஐஸ்' போதைப்பொருளைப் பயன்படுத்தி பேருந்துகளைச் செலுத்தி வருவதாக வவுனியா, புளியங்குளம் பொலிஸார் மேற்கொண்ட விசேட விசாரணையில் கண்டறியப்பட்டதை அடுத்து இந்தநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புளியங்குளம் பொலிஸ் பிரிவில் குறித்த பேருந்து மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதி இடம்பெற்ற விபத்து தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே இச்சம்பவம் தெரியவந்துள்ளது.
குறித்த சாரதி நாளொன்றுக்கு 2 கிராம் 'ஐஸ்' போதைப்பொருளை பயன்படுத்தி, இடைநிறுத்தங்களின்றி நீண்டதூரம் பயணிகளை ஏற்றிச் சென்றுள்ளார்.
சாரதியின் கடும் களைப்பு மற்றும் உடல் ரீதியான அசௌகரியங்களைப் பொருட்படுத்தாது பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதித்த குற்றத்திற்காக குறித்த பேருந்தின் உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.





.jpg)







.jpg)