மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தவர் தவறி வீழ்ந்து உயிரிழப்பு – வவுனியாவில் சம்பவம்



வவுனியா நொச்சிமோட்டை பகுதியில் மரத்தில் இருந்து வீழ்ந்த நிலையில் குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று (18) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

மரம்வெட்டும் தொழிலை மேற்கொள்கின்ற குறித்த நபர் இன்றையதினம் நொச்சிமோட்டை பகுதியில் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது தவறுதலாக மரத்தில் இருந்து கீழே வீழ்ந்துள்ளார்.

இதனால் படுகாயமடைந்த அவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் முன்னரே மரணமடைந்துள்ளதாக அங்கு தெரிவிக்கப்பட்டது.

சம்பவத்தில் ஓமந்தை பகுதியை சேர்ந்த குமார் வயது 45 என்ற குடும்பஸ்தரே மரணமடைந்துள்ளார். சம்பவம் தொடர்பாக ஓமந்தை பொலிசார் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.