
நீர்கொழும்பு, தளுபத்தை பல்லன்சேன, இளம் குற்றவாளிகள் சீர்திருத்த நிலைய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமது வழக்குகளை துரிதப்படுத்துமாறும் அதற்கான ஆவணங்களை அதிகாரிகள் உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும் என்றும் தமக்கு விரைவில் பிணை வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து இன்று (07) வெள்ளிக்கிழமை காலை முதல் சிறைச்சாலையில் உள்ள கைதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சிறைச்சாலையின் இறுதி வாயிற்கதவுக்கு அருகில் பெருந்திரளான கைதிகள் கூடி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகத்தை நடத்தியுள்ளனர்.
முன்னதாக, இச்சிறைச்சாலையில் உள்ள கைதிகள் சிலர் கூரையின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இச்சம்பவத்தை அடுத்து, அதிகளவான பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த மாதம் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதல் சூழ்நிலையைத் தொடர்ந்து, அங்கிருந்த கைதிகள் சிலர் பல்லன்சேன சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





.jpg)







.jpg)