சொகுசு வாகனத்தில் வந்திருந்த சந்தேகநபர், IGP-யின் அதிகாரப்பூர்வ இல்ல நுழைவாயில் அருகே காணொளி பதிவு செய்ததை பாதுகாப்பு பணியில் இருந்த விசேட அதிரடிப்படையினர் (STF) அதிகாரி கவனித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
அவரிடம் இருந்து காணொளி பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் கைப்பேசியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஆரம்ப விசாரணையில், கைப்பேசியில் IGP மற்றும் பிரதம நீதியரசரின் அதிகாரப்பூர்வ இல்லங்கள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளின் காணொளிகள் இருப்பது கண்டறியப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முதலில் பொழுதுபோக்கிற்காகவே காணொளி பதிவு செய்ததாக கூறிய சந்தேகநபர், பின்னர் வழங்கிய தகவல்களில் முரண்பாடுகள் காணப்பட்டதாகவும், மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.






.jpg)







.jpg)