.jpg)
பேராதனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெஹியங்க பகுதியில் புதையல் தோண்டி எடுக்கும் நோக்கில் அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்ட இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று வியாழக்கிழமை (27) பேராதனை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசேட சோதனையின்போதே இச்சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் முருதலாவ பகுதியைச் சேர்ந்த 27 மற்றும் 32 வயதுடைய நபர்களாவர்.
இச்சம்பவம் தொடர்பில் பேராதனை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.



.jpg)
.jpg)
.jpg)

.jpg)
.jpg)

.jpg)
.jpg)
