பிள்ளையான் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல்
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக சட்டமா அதிபர் பொலன்னறுவை மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.
கதிர்கதம்பி ஜெயகிஷன் எனப்படும் ஜெயந்தன், நிமல் தேவசுகன் எனப்படும் ஜெயகண்டன் மற்றும் நடராசா நகுலேந்திரன் எனப்படும் சிம்பு அல்லது நகுலன் ஆகியோரும் ஏனைய குற்றஞ்சாட்டப்பட்டவர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராகப் பணியாற்றிய பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத், 2006ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் திகதி முதல் 18ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.





.jpg)







.jpg)