
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைகளில் நிலவும் முஸ்லிம் கனிஷ்ட ஊழியர்கள் மற்றும் தாதி உத்தியோகத்தர்களின் சீருடைகள் தொடர்பான பிரச்சினைக்கு, குறுகிய கால மற்றும் நீண்ட கால நிரந்தர தீர்வினை வழங்குவதற்கு சுகாதார அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.
பாராளுமன்ற வளாகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (18) சுகாதார அமைச்சரின் தலைமையில் நடைபெற்ற விசேட கூட்டத்தின்போதே இந்த உடன்பாடு எட்டப்பட்டது.
இந்த சந்திப்பில் ஆளுங்கட்சியின் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
கடந்த சில நாட்களாக கவனத்தை ஈர்த்து வந்த இந்த உணர்வுபூர்வமான விடயம் தொடர்பாக, அனைத்து தரப்பினரின் கருத்துக்களும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டன.
வைத்தியசாலை கட்டமைப்பை தடையின்றி பராமரித்தல், சேவை பெறும் அனைத்து தரப்பினரின் ஒற்றுமை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் உரிமைகள் பாதுகாக்கப்படும் வகையில் அமைதியான மற்றும் நடைமுறைக்கு சாத்தியமான தீர்வினை எட்டுவதன் முக்கியத்துவம் இதன்போது வலியுறுத்தப்பட்டது.
இதற்கமைய, குறித்த பிரச்சினைக்கு உடனடியாக நடைமுறைப்படுத்தக்கூடிய குறுகிய கால நடவடிக்கைகளுடன், எதிர்காலத்தில் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்கான நீண்டகால நிரந்தர தீர்வினையும் இனங்கண்டு, அதனை விரைவாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக சுகாதார அமைச்சர் இதன்போது உறுதியளித்துள்ளார்.




.jpg)





.jpg)
