கடந்த காலங்களில் அரந்தலாவ பிக்குகள் படுகொலை, ஸ்ரீ மகா போதி தாக்குதல், தலதா மாளிகை தாக்குதல்களின் போது மகாநாயக தேரர்கள் எந்தவொரு பொலிஸ் விசாரணைகளிலும் தலையிடவில்லை. ஆனால், எந்த ஆதாரமுமின்றி, 180 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள சலேவுக்கு எதிராக பேராயர் மனு தாக்கல் செய்தமை கவலைக்குரியது.நாட்டுக்காக போராடிய சுரேஸ் சலேவை தொடர்ந்து தடுப்புக்காவலில் வைப்பது முற்றிலும் தவறானது. சலேவைக் கைது செய்வதற்கு முன்னர் சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்பட்டதா? என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர கேள்சியெழுப்பினார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
முன்னாள் அரச புலனாய்வு பிரிவின் பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய 180 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
தற்போது பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவது குறித்து அமைச்சரவை தீர்மானித்துள்ளதுடன், புதிய சட்டமூலமும் கொண்டுவரப்படவுள்ளது. எனவே,எதிர்வரும் 28 ஆம் திகதியுடன் முடிவடையும் இந்த 180 நாள் தடுப்புக் காவல் மேலும் செல்லுபடியாகாது என்பதால், அவரைப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தொடர்ந்து தடுத்து வைப்பது பொருத்தமற்றது.
சுரேஷ் சலேவின் மனைவியும் ஜனாதிபதிக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். தடுப்புக்காவல் இன்றி அவரை விளக்கமறியலில் வைக்குமாறும், அதன்பின்னர் விசாரணைகளுக்குச் சலே முழுமையான ஒத்துழைப்பை வழங்குவார் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 180 நாட்கள் கடந்தும் இதுவரை குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படவில்லை என்றால், நீதிமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவில்லை.சாட்சிகள் விசாரிக்கப்படவில்லை என்றால்,தடுப்புக்காவலை இரத்துச் செய்து அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தலாம்.
ஏனெனில், அவருக்கு தற்போது இதய அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது. விளக்கமறியலில் வைத்த பின்னரும் நீதிமன்ற நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல முடியும். மேலும், 180 நாட்கள் கழிந்த பின்னரும் போதிய சான்றுகள் இருந்திருந்தால் சட்டமா அதிபர் திணைக்களம் சலேவுக்கு எதிராகக் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்திருக்கும். ஆனால், இதுவரை அது செய்யப்படவில்லை என்றால், அவற்றுக்கான போதிய சான்றுகள் இல்லை என்பதே இதன் அர்த்தமாகும்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் சஹ்ரான், நெளபர் மௌலவி மற்றும் தேசிய தவ்ஹீத் ஜமாஅத் இணைந்து இத்தகைய பயங்கரவாதத் தாக்குதலை நடத்தத் திட்டமிட்டுள்ளதை 2015 முதல் பல ஆண்டுகளாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அறிந்து வைத்திருந்தது. தாக்குதலுக்கு 3 மாதங்களுக்கு முன்பு வனாதவில்லுவ பகுதியில் 100 கிலோ வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. மாவனெல்ல புத்தர் சிலைகள் உடைக்கப்பட்டன. வவுணதீவில் பகுதியில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் படுகொலை செய்யப்பட்டு ஆயுதங்கள் பறிக்கப்பட்டன. இவை அனைத்தும் விரைவில் ஒரு தாக்குதல் நடக்கப்போகிறது என்பதைச் சுட்டிக்காட்டின.
மிக முக்கியமாக, தாக்குதல் நடப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு, இந்திய புலனாய்வுத் துறை எந்தெந்த இடங்களில் யார் யார் தாக்குதல் நடத்துவார்கள் என்று துல்லியமாக எச்சரித்தும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அல்லது பொலிஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவை அனைத்தையும் அறிந்து வைத்துக் கொண்டு 269 உயிர்கள் பலியாகும் வரை அமைதியாக இருந்துவிட்டு, அத்தாக்குதலைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல்,அந்த நேரத்தில் நாட்டில் கூட இல்லாத சுரேஷ் சலேவை எவ்வாறு கைது செய்தனர்.குண்டுத்தாக்குதல்கள் சம்பவம் தொடர்பில் இடம்பெற்ற ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மற்றும் பாராளுமன்ற தெரிவுக்குழுக்களில் சுரேஸ் சலேவின் பெயர் குறிப்பிடவில்லை. சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளிலும் அவரது பெயர் உள்ளடக்கப்படவில்லை.
சுரேஷ் சலேவின் தடுத்து வைப்புக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு எதிராக ஒரே ஒரு எதிர்மனு மட்டுமே தாக்கல் செய்யப்பட்டது. பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையினால் தாக்கல் செய்யப்பட்டது.தாக்குதல் நடந்தபோது சுரேஷ் சலேதான் அரச புலனாய்வுத் தலைவராக இருந்தார் என்ற தவறான தகவலின் அடிப்படையிலேயே ஆண்டகை அந்த மனுவைச் சமர்ப்பித்துள்ளார். ஆனால், 2018 முதல் 2019 டிசம்பர் வரை சலே மலேசியா மற்றும் இந்தியாவில் தேசிய பாதுகாப்பு தொடர்பான பயிற்சி
கடந்த காலங்களில் அரந்தலாவ பிக்குகள் படுகொலை, ஸ்ரீ மகா போதி தாக்குதல், தளதா மாளிகை தாக்குதல்களின் போது மகாநாயக தேரர்கள் எந்தவொரு பொலிஸ் விசாரணைகளிலும் தலையிடவில்லை. ஆனால், எந்த ஆதாரமும் இன்றி 180 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள சலேவுக்கு எதிராகக் பேராயர் மனு தாக்கல் செய்தமைக்காக, இராணுவ சமூகத்தின் சார்பில் நாங்கள் மிகவும் கவலையடைந்துள்ளோம்.
எந்த ஆதாரத்தின் அடிப்படையில் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டார்,கடந்த 7 ஆண்டுகளாக வெளிவராத புதிய ஆதாரம் என்ன,25 பேருக்கு எதிராக 23,000 க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளைச் சட்டமா அதிபர் தாக்கல் செய்தபோது இந்த ஆதாரம் இருந்ததா,கைது செய்வதற்கு முன்பாக, 2016-2019 காலத்தில் சலே நாட்டில் இருக்கவில்லை என்பதை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் மூலம் குற்றப்புலான்வுத் திணைக்களம் உறுதிப்படுத்தியதா? சலேவைக் கைது செய்வதற்கு முன்னர் சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்பட்டதா? இந்த கேள்விகளுக்கு ஜனாதிபதி பதிலளிக்க வேண்டும் என்றார்.


.jpg)


.jpg)
.jpg)
.jpg)


.jpg)

