சாகர காரியவசம் வெளியிட்ட கருத்து தொடர்பில் விசாரணை ஆரம்பிக்க இடைக்கால பொலிஸ்மா அதிபர் உத்தரவு


இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் ஊடக சந்திப்பில் இடைக்கால பொலிஸ்மா அதிபர் குறித்து வெளியிட்ட கருத்து தொடர்பில் விசாரணை நடத்துமாறு இடைக்கால பொலிஸ்மா அதிபர் மத்திய குற்றப் புலனாய்வு பணியகத்திற்கு (CCIB) உத்தரவிட்டுள்ளார்.

நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் பொலிஸ் துறை மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும், தற்போதைய இடைக்கால பொலிஸ்மா அதிபர் அரசாங்கத்திற்கு அல்ல, மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்றும் சாகர காரியவசம் தெரிவித்திருந்தார்.

மேலும், அவ்வாறு செய்யத் தவறினால், "பிரதான வீதியில் பொதுமக்களால் தாக்கிக் கொல்லப்பட்ட 37ஆவது பொலிஸ்மா அதிபராக வரலாற்றில் இடம்பிடிக்க நேரிடலாம்" என அவர் கூறியிருந்தார்.

இந்தக் கருத்தைத் தொடர்ந்து, அதுகுறித்து விசாரணை நடத்துமாறு இடைக்கால பொலிஸ்மா அதிபர் மத்திய குற்றப் புலனாய்வு பணியகத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.