எரிபொருள் இறக்குமதிக்காக தற்போது ஏற்படும் செலவுகள் தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட பின்னர், அரசாங்கத்திடம் புதிய மானியத்தை கோருவதா அல்லது எரிபொருள் விலையை திருத்துவதா என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான முழுமையான மீளாய்வு அடுத்த இரண்டு வாரங்களுக்குள் மேற்கொள்ளப்படவுள்ளது.
முன்னதாக அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு பின்னர் இடைநிறுத்தப்பட்ட 15 பில்லியன் ரூபா மானியத்தை மீண்டும் பெற்றுக்கொள்வது அல்லது ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடுசெய்யும் வகையில் எரிபொருள் விலையை திருத்துவது குறித்தும் இதன்போது ஆராயப்படவுள்ளது.
கடந்த ஜூன் மாதத்தில் எரிபொருள் விலை திருத்தப்பட்டு ஜூலை மாதத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில், இந்த மாதம் எரிபொருள் விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மேற்கு ஆசியாவில் போர் ஆரம்பமான பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், தற்போது எரிபொருள் விலை 48 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக ராஜகருண தெரிவித்துள்ளார்.
இந்தியா, சிங்கப்பூர் மற்றும் தென்கொரியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து எரிபொருள் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்ற போதிலும், சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்பு மற்றும் காப்புறுதி, போக்குவரத்துக் கட்டணங்களின் உயர்வு ஆகியவை பாரிய சவாலாக மாறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





.jpg)






.jpg)
