AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட காணொளிகள் உட்பட, பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு துன்புறுத்தல் அல்லது மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையிலான படங்கள் மற்றும் காணொளிகள் தொடர்பான முறைப்பாடுகளை dir.cid@police.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப முடியும் என பொலிஸ் கணினிக் குற்ற விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வாறான உள்ளடக்கங்களைப் பகிரும் Facebook குழுக்களை அடையாளம் கண்டு முடக்குவதற்கும், அவற்றுடன் தொடர்புடையவர்களைக் கைது செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், பெண்கள் மற்றும் சிறுவர்களின் ஆபாசப் படங்களை வெளியிட்டதாகக் கூறப்படும் Facebook குழுக்களை நிர்வகித்த 21 வயதுடைய இளைஞர் ஒருவர் பெலியத்த பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது கையடக்கத் தொலைபேசியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் குறித்த தகவல்களை 011 2381058 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவும் பொலிஸ் கணினிக் குற்ற விசாரணைப் பிரிவுக்கு வழங்க முடியும்.




.jpg)
.jpg)
.jpg)

.jpg)
.jpg)

.jpg)
.jpg)
