இந்த Recall நடவடிக்கையில் Honda Civic, CR-V, Accord, Fit/Jazz, City, Insight, Stream, Odyssey, Integra மற்றும் Crossroad உள்ளிட்ட பல பிரபலமான Honda வாகனங்களின் குறிப்பிட்ட Model Code-கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
வாகன உரிமையாளர்கள் தங்களது Chassis Number-ஐ பயன்படுத்தி Honda Sri Lanka-வின் Safety Recall இணையத்தளத்தின் ஊடாக தங்களது வாகனத்தின் நிலையைச் சரிபார்க்க முடியும்.
தேவையான Airbag மேம்படுத்தலை மேற்கொள்ளத் தவறினால், விபத்தின்போது Airbag செயல்படும் சந்தர்ப்பத்தில் சாரதி அல்லது முன் இருக்கைப் பயணிக்கு காயம் ஏற்படும் அபாயம் இருப்பதாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் Honda வாகனங்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான Stafford Motor Co. (Pvt) Ltd., இந்த மேம்படுத்தல் பணிகள் முற்றிலும் இலவசமாக மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது.
Stafford Motor நிறுவனத்தால் இறக்குமதி செய்யப்படாத அல்லது இதற்கு முன்னர் அந்நிறுவனத்தில் பராமரிக்கப்படாத Honda வாகனங்களுக்கும் இந்த இலவச சேவை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




.jpg)
.jpg)
.jpg)

.jpg)
.jpg)

.jpg)
.jpg)
