
எதிர்வரும் முதலாம் திகதி முதல் வங்கி மற்றும் நிதி ரீதியான கொடுக்கல் வாங்கல்களுக்காக வரிகள் செலுத்துவோர் அடையாள இலக்க சான்றிதழைச் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
வங்கிக் கணக்குகளை ஆரம்பித்தல், நிதி நிறுவனங்கள் மூலம் முன்னெடுக்கப்படும் குறிப்பிட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் ஏனைய நிதி நடவடிக்கைகள் உள்ளிட்ட சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காகவே இந்தச் சான்றிதழைச் சமர்ப்பிப்பது அவசியமாக்கப்பட்டுள்ளது.







.jpg)




