காவந்திஸ்ஸ யானை சுடப்பட்ட சம்பவம் – சந்தேகநபர்கள் இருவருக்கும் நவம்பர் 11 வரை விளக்கமறியல் !



காவந்திஸ்ஸ யானை சுடப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர்கள் இருவரையும் எதிர்வரும் நவம்பர் மாதம் 11 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு மஹவ நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபர்கள் இருவரும் இன்று புதன்கிழமை (28) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே நீதவானால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

18 ஆம் திகதி, வலான ஊழல் தடுப்புப் பிரிவு மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் ஆகியன இணைந்து கல்கமுவ பகுதியில் மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் போது, காவந்திஸ்ஸ யானை மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக நம்பப்படும் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இந்த நடவடிக்கையின் போது இரண்டு துப்பாக்கிகளும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன.

நாட்டின் மிகவும் புகழ்பெற்ற தந்தம் கொண்ட யானைகளில் ஒன்றான காவந்திஸ்ஸ, அதன் வலது முன் காலில் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டுக் காயத்தினால் ஏற்பட்ட கடும் உடல்நலக் சிக்கல்களுடன் போராடி வந்த நிலையில், கடந்த 16 ஆம் திகதி உயிரிழந்தது.

உயிரிழப்பதற்கு முன் பல வாரங்களாக குறித்த யானைக்குக் கால்நடை வைத்திய சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.