
நோர்ட்டன் பிரிட்ஜ் பகுதியில் இன்று புதன்கிழமை (07) காலை இடம்பெற்ற சைக்கிள் விபத்தில் 14 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்றையதினம் காலை 7.30 மணியளவில், நோர்ட்டன் பிரிட்ஜ் கணபதி தமிழ் மகா வித்தியாலயத்தில் தரம் 9இல் கல்வி பயிலும் ஜெயராம் போல் ராஜ் என்ற மாணவன் சைக்கிளில் நோட்டன் பிரிட்ஜ் நோக்கி பயணித்துக்கொண்டிருந்தபோது, லக்சபான – ஹட்டன் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த மாணவன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்த மாணவன் தண்டுகலா தோட்டம் கீழ்ப்பிரிவைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் பேருந் போலீசாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் மேலும் தெரிவித்தனர்
சம்பவம் தொடர்பில் பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக நோர்ட்டன் பிரீஜ் போலீசார் மேலும் தெரிவித்தனர்.
சடலம் டிக்கோயா–கிளங்கன் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.












