‘க்ரிஷ்’ கொடுக்கல் வாங்கல் வழக்கு – நாமல் ராஜபக்ஷ, ஜானகி சிறிவர்தனவுக்கு ஒக்டோபர் 16 வரை விளக்கமறியல்



பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் 'க்ரிஷ்' நிறுவனத்தின் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன ஆகியோரை எதிர்வரும் ஒக்டோபர் 16 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
சந்தேகநபர்கள் இன்றைய (6) தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே, கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ் போதரகம இந்த உத்தரவை பிறப்பித்தார்.

க்ரிஷ் கொடுக்கல்வாங்கல் தொடர்பில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.